Friday, 18 March 2011

நீயும் நானும்

இப்படித்தான் இருந்தது நம்மில் உண்டான உறவு .

நிலவு பூமிக்கு நெருங்கி வருவதனால்

உண்டாகும் பயத்தைப் போல

அணு உலை சிதறி வெளியிடும் கதிர் வீச்சை

சுவாசிக்க பிடிக்காமல்அரண்டு ஓடுவதைப்  போல

பூமி அதிர்வில் மிரண்டு  சுனாமியின்

கோரத்தில் சிக்கி தவிப்பதைப் போல

முடிந்து போன கோரத்தில்

முகம் காணத் துடிப்பதைப் போல

இப்படித்தான் இருந்தது நம்மில் உண்டான உறவு .

ஆனாலும் ,

அடிக்கடி வந்து தொலைகிறது ஒரு  பயம்

நீயும் நானும் ஒன்று சேர்ந்து விடுவோமா என்று .

1 comment:

  1. கவிதை நன்றாக உள்ளது. அறிவியலில் என்னதான் நாம் முன்னேறினாலும் இயற்கையை நம்மால் என்றுமே வெற்றி கொள்ள இயலாது என்பதே நிதர்சனம்.

    ReplyDelete