அடிக்கடி என்னைத் தேடி
வருவார்கள் நண்பர்கள் .
வரும்போதெல்லாம்
அவர் வீட்டிலில்லை
என்ற பதில்
மனைவியிடமிருந்து வரும்.
ஏமாற்றத்துடன் திரும்பினோம்
பதில் வரும் நண்பர்களிடமிருந்து .
நாங்கள் வரும்போதெல்லாம்
நீ ஏன் இருப்பதில்லை வீட்டில்?
எங்கு சுற்றித் திரிகிறாய் ?
கோபம் தாங்கிய கேள்விகள்
மீண்டும் வரும்
நண்பர்களிடமிருந்து
என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்
என்னைத் தேடி
நீங்கள் வரும் வேளையில்
வெளியில் சுற்றித் திரிகிறேன் நான் -
என் நண்பர்களைத் தேடி ...
No comments:
Post a Comment