ஒரு பேருந்து பயண நெரிசலில்
கண்டக்டரின் வசவுச் சொல்லுக்கு பயந்து
என் அருகில் வந்து நின்றாய் நீ .
*
ஜன்னல்கள் மூடி இருந்த பேருந்தில்
என் இதயத்திற்கான கதவை
திறந்துவிட்டாய் நீ.
*
அலைபாய்ந்த உன் கேசத்தின் நுனி முனை கீறிச் சென்றது
என் விழித்திரையில் தொக்கி நின்ற
உன் தரிசனத்திற்கான பிம்பத்தை.
*
கிழித்து கொடுக்கப்பட்ட டிக்கட்டினுள்
கிழித்து கொடுக்கப்பட்ட டிக்கட்டினுள்
என்னையும் சேர்த்து
பத்திரபடுத்திக் கொண்டாய் நீ.
*
யாரேனும் என்னை சந்தேகிக்கிறார்களோ
என்று எண்ணுகிற வேளையில்
என்னை சந்தேகித்தாய் நீ
அடுத்த நிறுத்தத்தில் நான் இறங்கி விடுவேனோவென்று .
*
நீ நின்றுகொண்டிருப்பதை பார்த்து
என் மனம் வலிக்கும் வேலையில்
சொல்லாமலே இறங்கிச் சென்றாய்
அழுத்தமாய் என் கால்களை மிதித்தபடி.
*
வலிக்கிறது எனக்கு.
எந்தக் கடையில் செருப்பு வாங்குகிறாய் நீ?
eatho padathula varra scene mathiri irukku?..
ReplyDelete