அவர் அறையப்பட்டதால்
ஆணிகளின் கூர் அறியப்பட்டது .
*
அவர் உயிர் விட்டதால்
சாதா மரம் சாகா வரம் பெற்றது
*
அவர் புதைக்கப்பட்டதால்
கல்லறை குழி கூட கருவறையானது
*
அவர் உயிர்த்தெழுந்ததால்
இறப்பின் உண்மை பொய்த்துப்போனது
*
ஆனாலும்-
எங்கள் மத்தியில்
இயேசு எப்படி உயிர்ப்பார்
என்று தெரியவில்லை.
*
இரண்டுபட்டுக் கிடக்கிறது
எங்கள் ஊர் கல்லறை...
supper paskava illa summa paskava
ReplyDeletehmm you are correct..
ReplyDelete