Friday, 1 November 2013

காலை 

இட்லி,வடை,தலைக் குழம்பு  ... ,

மதியம் 

வெள்ளை சோறு,குறும்பாட்டுக் குழம்பு,நாட்டுக் கோழி வறுவல் ...

இரவு 

செரிக்க 

முடக்கத்தான் ரசம், சோறு ...

ஒன்று மட்டும் எப்பொதும்  

செரிக்கமுடிவதில்லை ...

வெடியின் சத்தத்தில்

மடிந்து போகும் 

பட்டாசு தொழிலாளிகள் ...

ஒவ்வொரு தீபாவளியன்றும் .

Saturday, 26 October 2013

தலை தீபாவளி

தைரியமாக

பட்டாசு கொளுத்துபவன்

பயப்படுகிறான் ...

பட்டாசு வெடிக்கும்போது ...

 

Friday, 29 March 2013

புரட்சியின் முதல்வனே...

புரட்சியின் முதல்வனே

அன்னை மரியின் புதல்வனே!

பழமையை புதைத்தவனே

மனிதத்தை விதைத்தவனே !



விண்ணகத்தின் மைந்தனே

மண்ணகத்தின் தேவனே !

அநீதியை அழித்தவனே

அறம் காத்த ஆண்டவனே !


மண்ணில் புதைந்தவனே
 
மரணத்தை வென்றவனே !

சிலுவையின் புனிதனே

உண்மையின்  வெண்மையே ....



உயிர்த்தெழுந்து  வருவாயே

தனி ஈழம் தருவாயே .......!